ஹெட்லைட்டில் கோளாறு: 483 கார்களை திரும்பபெறும் போர்ஷே
ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமாக திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் கேனே(பெயருக்கு சிவப்பு மிளகாய் என்று அர்த்தமாம்) எஸ்யூவி உலக அளவில் மிக விரும்பப்படும் மாடலாக உள்ளது.
இந்த நிலையில், கேனே எஸ்யூவிக்களின் ஹெட்லைட் லாக்கிங் சிஸ்டத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, உலக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ள 1,00,000 கேனே எஸ்யூவிக்களை திரும்ப பெறுவதாக போர்ஷே கடந்த வாரம் அறிவித்தது.
இதில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கேயென்னே கார்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள 483 கேனே எஸ்யூவிக்களும் கோளாறை சரிசெய்து தருவதற்காக திரும்ப பெறுவதாக போர்ஷே தெரிவித்துள்ளது.
ஹெட்லைட் லாக்கிங்கில் உள்ள கோளாறை சரிசெய்ய 45 நிமிடங்கள் மட்டுமே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ஷே கேனே எஸ்யூவி இந்தியாவில் ரூ.61 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
(கேனே கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications









