6 புதிய டீலர்கள்;தற்காலிக ஆலை: போர்ஷே அதிரடி திட்டம்

பிரிமியம் கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய சேவை அளிக்கும் விதமாக புதிய டீலர்களை திறக்க முடிவு செய்துள்ளது.
அகமதாபாத், கோல்கட்டா, பெங்களூரூ, சண்டிகர், குர்கான் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் புதிய டீலர்களை நியமிக்க உள்ளது. அடுத்த 4 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.
தவிர, தற்காலிக அசெம்பிளிங் ஆலையையும் திறப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், இந்திய மார்க்கெட்டில் விரைவான வளர்ச்சியை பெற முடியும் என போர்ஷே நம்புகிறது.
கேயென்னி, பனமிரா, பாக்ஸ்டர் எஸ் மற்றும் 911 ஆகிய கார் மாடல்களை போர்ஷே இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இதில், கேயென்னி டீசல் மாடலுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. போர்ஷே நிறுவனம் போக்ஸ்வேகனின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








