சூரிய மின்சக்தியில் இயங்கும் புதிய சோலார் கார்: பிரணாப் முகர்ஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்

Solaris
முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் புதிய சோலார் காரின் முதல் சாலை ஓட்டத்தை ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சோலாரிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய சோலார் காரை டெல்லி தொழில்நுட்ப பல்கலைகழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அதிகபட்சம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன்கொண்ட இந்த புதிய கார் சுற்றுச் சூழலுக்கு துளிகூட மாசு ஏற்படுத்தாது.

2 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்ககை வசதிகொண்டிருக்கும் இந்த புதிய சோலார் காரில் தேவைப்பட்டால் கூடுதலாக 3 இருக்கைகளை பொருத்திக் கொள்ளலாம். இந்த கார் பற்றிய இதர விபரங்கள் வெளியிடப்படவில்லை.

வரும் 15ந் தேதி முதல் 29ந் தேதி வரை தென் ஆப்ரிக்காவில் நடைபெற இருக்கும் சசோல் சோலார் சவால் என்ற போட்டியில் இந்த கார் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான புதிய சோலார் கார்கள் கலந்து கொள்ள உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 5, 2012, 10:10 [IST]
English summary
President Pranab Mukherjee flagged off a solar-powered passenger car developed by Delhi Technological University yesterday.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+