ரியோ மினி எஸ்யூவிக்கு 200 டீலர்களை நியமிக்கும் பிரிமியர்

Premier Rio Mini Suv
ரியோ மினி எஸ்யூவிக்கு நாடு முழுவதும் புதிதாக 200 ஷோரூம்களை திறக்க இருப்பதாக பிரிமியர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒரே மினி எஸ்யூவி என்ற பெருமையை பிரிமியர் ரியோ எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ரியோ எஸ்யூவியை பிரிமியர் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலையும், பிஎஸ்-3 அம்சம் கொண்ட பியூஜியட்டின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்தி ரியோ எஸ்யூவியை பிரிமியர் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்ட மாநகரங்களிலும் பிஎஸ்-4 அம்சம் கொண்ட புதிய டீசல் ரியோ எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்த பிரிமியர் திட்டமிட்டுள்ளது.

புதிய டீசல் மாடலுக்கு ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல் எஞ்சினை பொருத்தி ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர பிரிமியர் திட்டமிட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் புதிதாக ரியோ எஸ்யூவிக்காக 200 ஷோரூம்களையும் திறக்க பிரிமியர் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தனது ரியோ எஸ்யூவியின் விற்பனையை வெகுவாக உயரும் என்று பிரிமியர் கருதுகிறது.

தற்போது ரியோ மினி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.4.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 27, 2012, 12:30 [IST]
English summary
Premier has decided to open 200 new dealerships across the country for Rio Mini SUV. The company also planning to launch BS-4 diesel model in next couple of months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+