புதிய எம்பிவி காரை அறிமுகப்படுத்த பிரிமியர் திட்டம்
6 பேர் செல்லும் வசதி கொண்ட புதிய எம்பிவி காரின் சோதனை ஓட்டங்களை பிரிமியர் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ரியோ என்ற மினி எஸ்யூவியை பிரிமியர் விற்பனை செய்து வருகிறது. நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரே மினி எஸ்யூவி ரியோ எஸ்யூவிதான்.

இந்த நிலையில், எம்பிவி மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், அடுத்து அந்த சீன நிறுவனம் தயாரித்து வரும் எம்பிவி காரை அறிமுகப்படுத்த பிரிமியர் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த புதிய எம்பிவி காரின் சோதனை ஓட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு வரிசை இருக்கைகள் கொண்டதாக இருக்கும் இந்த எம்பிவி காரில் முன்வரிசையில் 3 பேரும் பின்வரிசையில் 3 பேரும் (3+3) அமர்ந்து பயணம் செய்யலாம்.
தற்போது ரியோ மினி எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 மல்டி ஜெட் ஃபியட் டீசல் எஞ்சினை இந்த புதிய எம்பிவியிலும் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரூ.9 லட்சம் விலையில் இந்த புதிய எம்பிவி இந்திய மார்க்கெட்டில் களமிறங்கலாம் என்று தெரிகிறது. தனி நபர் பயன்பாடு மற்றும் வர்த்தக மார்க்கெட்டுக்கு ஏற்ற எம்பிவியாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications








