ஃபியட் டீசல் எஞ்சினுடன் விரைவில் களமிறங்கும் பிரிமியர் மினி எஸ்யூவி
பழம் பெருமை வாய்ந்த பிரிமியர் கார் நிறுவனம் தற்போது சீனாவை சேர்ந்த ஆட்டோமாபைல் நிறுவனத்தின் மினி எஸ்யூவியை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்திய மார்க்கெட்டில் இருக்கும் ஒரே மினி எஸ்யூவி பிரிமியர் விற்பனை செய்து வரும் ரியோவைத்தான் கூற முடியும். இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாடு பிரச்னைகளால் ரியோ விற்பனையில் சிறிது தேக்கநிலை இருந்து வருகிறது.
இதனை போக்கும் விதமாக தற்போது பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பிரிமியர்.
87 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் அதிக மைலேஜ் மற்றும் போதுமான பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் வல்லமை பொருந்திய இந்த புதிய டீசல் எஞ்சினை ரியோவில் பொருத்தி தற்போது இறுதி கட்ட சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது பிரிமியர்.
இந்த நிலையில், வெகு விரைவில் புதிய ரியோவை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பிரிமியர் நிறுவனம் தெரிவி்ததுள்ளது. வடிவமைப்பில் அதிக ஆளுமையை பரைசாற்றும் ரியோவுக்கு ஃபியட் டீசல் எஞ்சின் நிச்சயம் புதுத் தெம்பை ஊட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
எங்களது ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications









