26 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய பஞ்சாப் தொழிலதிபர்

பேன்ஸி நம்பர்
பேன்ஸி நம்பர்களை ஏலம் விடுவதன் மூலம் சண்டிகர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு வருவாய் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. கடந்த ஜூனில் நடந்த ஏலத்தில் சண்டிகர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு 70 லட்சம் வருவாய் கிடைத்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் நடத்தப்ட்ட பேன்ஸி நம்பர்கள் ஏலம் மூலம் சண்டிகர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு 69 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இந்த முறை ஒரே ஒரு பேன்ஸி நம்பர் மட்டும் 26 லட்சத்துக்கு ஏலம் போனது.

பஞ்சாப் மாநிலம், தொயபா பகுதியை சேர்ந்த பெருநிலக்கிழார் கம் கட்டுமான நிறுவன அதிபர் அமர்ஜித் சிங், தனது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காருக்குத்தான் இவ்வளவு விலை கொடுத்து இந்த பேன்ஸி நம்பரை ஏலத்தில் வாங்கியுள்ளார். சிஎச் 01 ஏபி 0001(CH001 AP 0001) என்ற அந்த நம்பரை இவ்வளவு விலை கொடுத்து ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு,

அனைவரையும் போன்று எனக்கு ராசி, விருப்பமான நம்பர் என்பதெல்லாம் இல்லை. இந்த ஏலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் இந்த நம்பரை வாங்கினேன்," என்று கூலாக கூறினார்.

இந்த பென்ஸ் எஸ் கிளாஸ் கார் தவிர ஒரு எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் கார்கள் அமர்ஜித் சிங்கிடம் உள்ளது. கடந்த ஜூனில் நடந்த ஏலத்தில் அமிர்தசரசை சேர்ந்த விவசாயி கம் தொழிலதிபர் தனது டொயோட்டா லேண்ட் குரூஸர் காருக்கு சிஎச் 01 ஏஎன் 0001 என்ற பேன்ஸி நம்பரை 17 லட்சம் கொடுத்து வாங்கினார்.

இதேபோன்று, ஏப்ரலில் நடந்த ஏலத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய ஹரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர் தனது பென்ஸ் காருக்கு ரூ.9 லட்சம் கொடுத்து சிஎச் 01 ஏஎம் 0001 என்ற பேன்ஸி எண்ணை வாங்கியது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 11, 2012, 13:35 [IST]
English summary
Chandigarh based builder Amarjit Singh has shelling out Rs 26,05,000 lakh for Registration number of his latest buy, a Rs 1crore, Mercedes-Benz S-Class, at the auction held in Chandigarh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+