ரூ.9.5 கோடிக்கு ஏலம் போன பழைய அஸ்டன் மார்ட்டின் கார்!

பில் காலின்ஸ் நிறுவனத்தின் மேலாளர் டோனி ஸ்மித் வைத்திருந்த இந்த அஸ்டன் மார்ட்டின் கார் கடந்த 1991ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. மார்ட்டின் டிபி4 ஜிடி ஸகாட்டோ சேங்ஷன் 2 கூபே மாடலான இந்த கார் 1960ம் ஆண்டு டிபி4 ஜிடி ஸகாட்டோ காரின் சேஸிஸின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த கார் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை.
இதனால், வெறும் 4 கார்களை மட்டுமே தயாரித்த அஸ்டன் மார்ட்டின் இதன் உற்பத்தியை உடனடியாக நிறுத்திவிட்டது. அதில், ஒரு கார்தான் டோனி ஸ்மித் வைத்திருந்தது. இந்த காரை தற்போது டோனி ஸ்மித் லண்டனை சேர்ந்த போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்திடம் விற்று விட்டார்.
8,000 கிமீ மட்டுமே ஓடியுள்ள இந்த கார் சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. யாருமே எதிர்பாராத வகையில், இந்த காரை ஏலம் எடுக்க சுமார் 2,000 பேர் ஏலம் நடந்த அரங்கில் குவிந்தனர். மிகவும் பரபரப்பாக நடந்த ஏலத்தின் முடிவில் இந்த கார் ரூ.9.5 கோடிக்கு ஏலம் போய் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இந்த காரில் 352 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் திறன் கொண்ட 4.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஷன் உள்ளிட்டவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இந்த கார் கையாளுமையில் தற்போது சிறப்பாக இருப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








