மஹிந்திராவின் வளர்ச்சியை பாராட்டிய ரத்தன் டாடா

Ratan Tata
மஹிந்திராவின் செயல்பாடுகள், வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா வெகுவாக பாராட்டியுள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில், நேற்று நடந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பங்குதாரர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

தான் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம் என்பதால் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசினார். அப்போது கூறியதாவது:

" மஹிந்திராவின் இலக்குகள் அதனை அடைவதற்கான அவர்களது நடவடிக்கைகள், முயற்சிகளுக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கிறேன். ஆனால், நம்மில் சில குறைகள் இருப்பது வருத்தமளிக்கிறது.

நம்மில் அனைத்து வசதிகளும் இருந்தும் மஹிந்திராவை துரத்துவது துரதிருஷ்டவசமானது. மஹிந்திராவிடமிருந்து சில பாடங்களை கற்றுக்கொண்டு நம்மை நாம் முன்னிலை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து வாகன பிரிவுகளிலும் ஒரே இலக்கை மனதில் கொண்டு வெற்றி பெற பணியாற்ற வேண்டும். மாறி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணியாளர்கள் முழு உத்வேகத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும்.

மேலும், நானோ காரின் வெற்றிக்கு இன்னும் சில நடைவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண்டுக்கு 2 லட்சம் நானோ கார்களை விற்பனை செய்ய முடியும் என்ற நம்பி்க்கை என்னுள் இருக்கிறது.

தவிர, ஜாகுவார் லேண்ட்ரோவர் பிராண்டில் புதிய காம்பெக்ட் கார்களை தயாரிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ பிராண்டுகளின் மார்க்கெட்டில் ஜாகுவார் லேண்ட்ரோவருக்கும் இடத்தை பெற முடியும்," என்று கூறினார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கார் மார்க்கெட்டில் டாடா மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி மஹிந்திரா 3வது இடத்தை பிடித்தது நினைவுகூறத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 11, 2012, 11:15 [IST]
English summary
Ratan Tata, the chairman of India's largest automobile company, Tata Motors, hails Mahindra and expressed disappointment at trailing Mahindra & Mahindra in the highly competitive passenger vehicle market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+