அரசியல் தட்பவெப்பம் சாதகமானால் மே.வங்கத்தில் ஆலை: ரத்தன் டாடா

ரத்தன் டாடா
"அரசியல் தட்பவெப்ப நிலைகள் சாதகமாக இருந்தால், நிச்சயமாக மேற்கு வங்க மாநிலத்தில் கார் ஆலை திறப்பதில் எந்த பிரச்னையும் இல்லை," என டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா கூறினார்.

மேற்குவங்கத்தில் நானோ காருக்காக அமைக்கப்பட்ட தொழிற்சாலை விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. மேலும், தற்போதைய முதல்வரான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் முந்தைய இடதுசாரிகளின் அரசை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினார். இந்த நிலையில், ஆட்சியை பிடித்துள்ள மம்தா புதிய ஆலைகள் அமைப்பதற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த நிலையில், டீ தூள் மற்றும் இதர பானங்கள் தயாரிப்பு நிறுவனமான டாடா குளோபல் பீவரேஜஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் ரத்தன் டாடா பேசினார். அப்போது மேற்குவங்கத்தில் ஆலை அமைக்கப்படுமா என பங்குதாரர்கள் கேட்டனர். அங்கு ஆலை அமைக்க டாடா முடிவு எடுத்தது பற்றியும் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ரத்தன் டாடா கூறியதாவது:

"ஜாம்ஷெட்பூரில் 6 ஆண்டுகள் வசித்தேன். அப்போது, அடிக்கடி கோல்கட்டா செல்வேன். அங்குள்ள மக்களின் பாசம் உள்ளிட்டவை எனக்குள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. எனவேதான். மேற்கு வங்கத்தில் ஆலை அமைக்க முடிவு எடுத்தேன்.

இப்போதும் அங்குள்ள மக்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. அரசியல் தட்பவெப்ப சூழ்நிலை சரியாக இருந்தால் அந்த மாநிலத்தின் எந்த இடத்திலும் டாடா ஆலை அமையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு அரசியல் நட்புறவு இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

Article Published On: Saturday, September 1, 2012, 14:51 [IST]
English summary
Tata motors chairman Ratan Tata has said there is still a possibility of locating a Tata Motors factory somewhere in West Bengal, but can be done only when "there is friendliness at the political level".
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+