நானோ கார் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?:கருத்தை கூறுங்கள்

இந்த நிலையில், நானோ கார் விற்பனையை அதிகரிக்க அதன் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. மேலும், ஒரு லட்ச ரூபாய் கார் என்று பிரகடனப்படுத்தப்பட்ட நானோவின் பேஸ் வேரியன்ட் காரின் ஆன்ரோடு விலையே 2 லட்சத்தை நெருங்குகிறது.
நானோ கார் விற்பனையை அதிகரிக்க கூடுதல் அம்சங்களை சேர்த்து, குறைவான விலையை தக்கவைக்க வேண்டும் என்று மும்பையை சேர்ந்த பிரிக்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது. இதுதொடர்பாக, டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கு ஏராளமான கருத்துக்களை வந்துள்ளன.
விற்பனையை அதிகரிக்க ஐரோப்பிய வெர்ஷனான மெகாபிக்சல் போன்று நானோ காரை மாற்ற வேண்டும் என எமது வாசகர் சச்சின் எமக்கு கடிதம் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். முன்பக்கம் கருப்பு நிற பிளாஸ்டிக் பம்பரை மாற்ற வேண்டும், ஆட்டோ எஞ்சின் போன்று வரும் சப்தத்தை மாற்ற வேண்டும். கிரவுன்ட் கிளியரன்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, நானோவை வெற்றிகரமான மாடலாக மாற்ற உங்களது கருத்துக்களையும் இங்கே தெரிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications