புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தும் ரினால்ட்

டஸ்ட்டர் எஸ்யூவிக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் இந்திய வர்த்தக பணிகளை தீவிரமாக்கியுள்ளது ரினால்ட். மேலும், உலக அளவில் இந்தியா தனது டாப் 10 மார்க்கெட்டுகளில் ஒன்றாக கருதுவதாக சமீபத்தில் தெரிவித்தது.
இதை சாத்தியப்பட வைக்கும் விதமாக புதிய ஹேட்ச்பேக் காரை தயாரித்து வருவதாக ரினால்ட் தெரிவித்துள்ளது. கேரளாவில் டஸ்ட்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்யும் விழா நடந்தது.
இதில், கலந்துகொண்ட ரினால்ட் இந்தியா தலைவர் மார்க் நசீப் கூறுகையில்,"வரும் பண்டிகை காலத்தில் புதிய செடான் காரை அறிமுகம் செய்ய உள்ளோம்.
இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த ஹேட்ச்பேக் காரை வடிவமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது," என்றார்.
புதிய ஹேட்ச்பேக் காரை ரினால்ட் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக யூகத் தகவல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், அதனை நிறுவனத்தின் தலைவரே தற்போது ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார். ஆனால், எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.
இந்த புதிய ஹேட்ச்பேக் கார் ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








