டீசல் ப்ளூயன்ஸ் விலையை ரூ.1.65 லட்சம் அதிரடியாக குறைத்த ரெனோ

கடந்த ஆண்டு ப்ளூயன்ஸ் பிரிமியம் செடான் கார் மூலம் இந்திய மார்க்கெட்டில் தனித்து களமிறங்கியது ரினால்ட். முதலில் பெட்ரோல், பின்னர் ப்ளூயன்ஸின் டீசல் மாடல்களை ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இருப்பினும், இதன் ரகத்தை சேர்ந்த பிற கார் மாடல்களை விட இந்த காரின் விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதினர். இதனால், ப்ளூயன்ஸ் எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சியை எட்டவில்லை.
இதனால், தற்போது ப்ளூயன்ஸ் இ-2 டீசல் வேரியன்ட்டினஅ விலையை ரூ.1.65 லட்சம் குறைத்துள்ளது ரினால்ட். அட்வான்ட்டேஜ் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய இ-2 வேரியன்ட் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது இ-2 டீசல் ப்ளூயன்ஸ் ரூ.11.99 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூயன்ஸ் டீசலில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஏபிஎஸ், இஎஸ்பி, அலாய் வீல்கள், டியூவல் ஏர்பேக்குகள், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டார்ட் வசதி, டியூவல் ,ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, பாக்கிங் சென்சார் ஆகிய ஏராளமான வசதிகளுடன் இ-2 டீசல் ப்ளூயன்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








