டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகத்தை ஒத்திப்போடும் ரினால்ட்

Reno Duster
வரும் ஜூலை மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவியை தீபாவளி ரேஸில் இணைத்து விட ரினால்ட் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ப்ளூயன்ஸ், கோலியோஸ், பல்ஸ் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்ட அந்த நிறுவனம் அடுத்து டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளது.

5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட டஸ்ட்டர் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்று. எனவே, இந்தியாவிலும் டஸ்ட்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த டஸ்ட்டர் எஸ்யூவி வரும் ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் டஸ்ட்டரை விற்பனைக்கு கொண்டு வர ரினால்ட் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் தீபாவளி பண்டிகையின்போது அறிமுகம் செய்தால் வாடிக்கையாளர் கவனத்தை வெகுவாக ஈர்க்க முடியும் என்று ரினால்ட் கருதுகிறது. இதனிடையே, இந்தியாவில் டஸ்ட்டரை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ள ரினால்ட் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் டஸ்ட்டரை ஏற்றுமதி செய்யவும் முடிவுவெடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 10, 2012, 10:51 [IST]
English summary
French car maker Renault has decided to delayed the Duster compact suv launch in India. As per the reports, Renault have been pushed the duster launch to October-November time frame. Renault expected duster will launch during festival season for improving the sales of the Duster.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+