மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் ரினால்ட் எலக்ட்ரிக் சூப்பர் கார்

Renault Dezir
கனவுகளை மெய்ப்பட வைப்பதில் மனித மூளையின் திறனை அளவுகோல் வைத்து அளவிட முடியாது. ஆம், முடியாது என்ற வார்த்தையை அகராதியிலிருந்து நீக்கும் அளவுக்கு மனித மூளையின் ஆற்றல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

குறைந்த பிக்கப், குறைந்த தூரம் செல்லும் திறன், குறைந்த வேகம் என எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என்ற இன்றைய மனநிலையை சற்றே திருத்திக்கொள்ள வைத்திருக்கிறது ரினால்ட் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் வடிவமைப்பு. மனிதன் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இந்த எலக்ட்ரிக் கார் ஓர் சிறந்த உதாரணம்.

அடுத்த கட்டத்துக்கான எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை தந்து தனது வலிமையை பரைசாற்றும் வகையில் இந்த எலக்ட்ரிக் காரை வடிவமைத்து உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது பிரான்ஸ் கார் நிறுவனமான ரினால்ட். எலக்ட்ரிக் கார் ரொம்ப போர் என்ற முத்திரையை எப்போது தகர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ரினால்ட்டின் இந்த எலக்ட்ரிக் கார் சரியான தீர்வு.

ஆம், கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் சூப்பர் காரை, கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிக்கு வைத்து கண்களுக்கு விருந்து படைத்தது ரினால்ட்.

ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கான சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய இந்த காரில் அப்படி என்ன பெரிதாக இருக்க போகிறது என்று தவறாக எண்ண வேண்டாம். கார்களால்தான் இன்று சுற்றுச்சூழல் பெரிதாக மாசுபட்டு வருகிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அலாரம் அடித்து வருகின்றனர். குறிப்பாக, அதிக எரிபொருளை விழுங்கும் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் தீங்கை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

ஆனால், இந்த சூப்பர் கார் முழுக்க முழுக்க அந்த எண்ணத்தை மாற்றும் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.. சூப்பர் கார்களுக்கு இணையான பிக்கப், செயல்திறன் வடிவமைப்பு என அனைத்திலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது இந்த ரினால்ட் எலக்ட்ரிக் சூப்பர் கார். 110 கிலோவாட் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் இந்த சூப்பர் கார் அதிகபட்சம் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மணிக்கு அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த கார், சிசர் கதவுகள், அடுத்த தலைமுறைக்கான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. '0 எமிசன்' என்று கூறப்படும் கார்பன் புகை அறவே அற்ற இந்த காரை வடிவமைத்துள்ள ரினால்ட் நிறுவனத்தை ஐரோப்பிய யூனியனும் பாராட்டியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 16, 2012, 10:44 [IST]
English summary
Renault India which currently has only three cars in its Indian line-up surprised visitors of its stall at the 12th Delhi Auto Expo by displaying the DeZir electric car. This concept vehicle was truly the central attraction at Renault's stall. It was appreciated well not ony for its gorgeous looks but also its performance figures.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+