எர்டிகாவை கட்டம் கட்டிய ரெனோ: புதிய எம்பிவியை களமிறக்க திட்டம்

லாட்ஜி எம்பிவி கார் 7 பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதியை கொண்டிருக்கும். இந்த புதிய எம்பிவியில் தற்போது கைவசம் இருக்கும் கே9கே டீசல் எஞ்சினையும், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் பொருத்தி அறிமுகம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
டேஸியா லோகோவை மட்டும் பிடுங்கிவிட்டு தனது லோகோவை மாட்டி இந்த புதிய காரை கூடிய விரைவாக அறிமுகப்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் ரெனோ தற்போது இந்த திட்டத்தில் மும்முரமாக இருக்கிறது.
இந்த புதிய கார் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய எம்பிவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரினால்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








