டஸ்ட்டருக்கு குவியும் புக்கிங்.. சென்னை ஆலையில் 24 மணிநேரமும் உற்பத்தி!

இந்திய மார்க்கெட்டின் முதல் காம்பெக்ட் எஸ்யூவியாக டஸ்ட்டரை கடந்த ஜூலை மாதம் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின், 7 பேர் செல்லும் வசதி, விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் டஸ்ட்டருக்கு ஏக வரவேற்பு கிடைத்துள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 15,000 புக்கிங்குகளை டஸ்ட்டர் வாரி சுருட்டியுள்ளது. மேலும், ஸ்கேலா செடான் காரையும் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளதால் ரினால்ட்டுக்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது ஆலையில் 3 ஷிப்டுகளில் கார் உற்பத்தி செய்ய ரினால்ட் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டஸ்ட்டர் எஸ்யூவியை டெலிவிரி கொடுக்க முடியும். தற்போது டஸ்ட்டர் வாங்குவோர் டெலிவிரி பெற 2 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.


Click it and Unblock the Notifications








