சொட்டு விளம்பரம் இல்லாமல் 18,000 புக்கிங்குகளை சுருட்டிய டஸ்ட்டர்

Renault Duster
டஸ்ட்டர் எஸ்யூவி இதுவரை 18,000 புக்கிங்குகளை பெற்றுள்ளது. இதனால், டஸ்ட்டரை அறிமுகப்படுத்திய பின் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரத்தை கிடப்பில் போட்டுள்ளது ரினால்ட்.

கடந்த ஜூலையில் டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காரை ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வந்த டஸ்ட்டர் வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக, டீசல் மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியிலிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு டாப் வேரியண்ட் டீசல் மாடல்களுக்கும் நான்கரை மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீள்கிறது.

இந்தநிலையில், டஸ்ட்டரை விளம்பரப்படுத்துவதற்காக ரூ.15 கோடி வரை செலவில் விளம்பர பிரச்சாரங்களை செய்ய ரெனோ திட்டமிட்டிருந்தது. இதற்காக, டிவி, செய்தித் தாள்கள் மற்றும் ஆன்லைனில் விளம்பரம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.

ஆனால், விளம்பரங்கள் எதுவும் செய்யப்படாத நிலையிலேயே இதுவரை டஸ்ட்டருக்கு 18,000 புக்கிங் குவிந்துள்ளது. புக்கிங் செய்யப்பட்ட கார்களை டெலிவிரி கொடுப்பதற்கே இன்னும் நான்கரை மாதங்கள் வரை பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், விளம்பரங்களை செய்தால் டஸ்ட்டருக்கு மேலும் கணிசமான புக்கிங் செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் ரினால்ட்டுக்கு வந்துவிட்டது. இதனால், டஸ்ட்டருக்காக எடுக்கப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்புவதை அந்தநிறுவனம் தாமதப்படுத்தியிருக்கிறது. தீபாவளி சமயத்தில் வேண்டுமானால் விளம்பர பிரச்சாரங்களை செய்யலாம் என திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா குவான்ட்டோ வந்தபோதிலும், இந்த ஆண்டு இறுதியில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வரும் வரை ரினால்ட் டஸ்ட்டருக்கு சரிசமமான போட்டியாளர் இல்லாததால் புக்கிங் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 28, 2012, 12:12 [IST]
English summary
Renault Duster has bagged 18,000 bookings in short span.Renault delay an elaborate post-launch advertising campaign planned to promote the vehicle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+