எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி நாளை மும்பை மற்றும் டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது. விலை உள்ளிட்ட விபரங்கள் அப்போது வெளியிடப்படும் என்று ரினால்ட் தெரிவித்துள்ளது.
ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் வர இருப்பதால், வாடிக்கையாளர் மத்தியில் ரெனோ டஸ்ட்டருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இரண்டு பவரை வெளிப்படுத்தும் மாடல்களில் வருவதும் டஸ்ட்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கும் டஸ்ட்டர் லிட்டருக்கு 20.46 கிமீ மைலேஜ் செல்லும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
எனவே, டீலர்களில் டஸ்ட்டருக்கு அதிக அளவில் புக்கிங் குவிந்து வருகிறது. மேலும், டில்ட் ஸ்டீயரிங், கீ லெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர் என ஏராளமான வசதிகளுடன் வருகிறது.
ஏபிஎஸ், ஏர்பேக்குகள் கொண்ட மாடலும் கிடைக்கும். மொத்தத்தில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் ரெனோ டஸ்ட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








