யூஸ்டு கார் மார்க்கெட்டில் கால் பதிக்கும் ரினால்ட்!

பிரெஞ்சு நிறுவனமான ரினால்ட் கடந்த ஆண்டு முதல் இந்திய மார்க்கெட்டில் தனித்து கார் விற்பனை செய்து வருகிறது. இதுவரை 4 மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த டஸ்ட்டர் எஸ்யூவிதான் அந்த நிறுவனத்தின் பெயரை கொஞ்சம் பிரபலமடைய செய்து வருகிறது. இந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் களமிறங்க ரினால்ட் திட்டமிட்டுள்ளது.
புதிய கார் மார்க்கெட்டை விட பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட் சீரான வளர்ச்சி பெற்று வருவதால், இந்த மார்க்கெட்டில் விரைவாக கால் பதித்து விட முடிவு செய்துள்ளது ரினால்ட்.
நாடு முழுவதும் விரைவில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான ஷோரூம்களை அந்த நிறுவனம் திறக்கிறது. மேலும், இந்த ஷோரூம்களில் அனைத்து பிராண்டுகளின் பயன்படுத்தப்பட்ட கார்களையும் ரினால்ட் விற்பனை செய்ய இருக்கிறது.
மாருதி, ஹூண்டாய், டொயோட்டா, மஹிந்திரா என முன்னணி நிறுவனங்கள் வரிசையில் தற்போது ரினால்ட் நிறுவனமும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் இறங்குகிறது.


Click it and Unblock the Notifications