விராத் கோஹ்லிக்கு டஸ்ட்டர் எஸ்யூவியை பரிசாக வழங்கிய ரினால்ட்

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில், 4-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா அபாரமாக வென்றது. மேலும், இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்காக, அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும், தொடர் நாயகன் விருது பெற்ற விராத் கோஹ்லிக்கு ரினால்ட் நிறுவனம் தனது டஸ்ட்டர் எஸ்யூவியை பரிசாக வழங்கியது. பரிசாக கிடைத்த டஸ்ட்டர் எஸ்யூவியில் சக வீரர்களுடன் கோஹ்லி உற்சாகமாக மைதானத்தை வலம் வந்தார்.
டஸ்ட்டர் எஸ்யூவி கடந்த மாதம்தான் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.7.19 லட்சம் விலையில் வந்த டஸ்ட்டர் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர் மத்தியி்ல பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் புக்கிங்கில் அசத்தி வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் டஸ்ட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.பெட்ரோல் எஞ்சின் 104 பிஎஸ் பவரையும், டீசல் எஞ்சின் 85 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும்.
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.24 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.45 கிமீ மைலேஜையும் வழங்கும் என ரினால்ட் தெரிவிக்கிறது. 459 லிட்டர் பூட் ரூம் கொண்ட இந்த எஸ்யூவியில் பின் இருக்கையை மடக்கிக் கொண்டால் 1,000 லிட்டர் அளவுக்கு பொருட்களை வைப்பதற்கான இடம் கிடைக்கும்.
சென்னையிலுள்ள ரினால்ட்-நிசான் ஆலையில் டஸ்ட்டர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்தான் விராத் கோஹ்லி டொயோட்டா கார் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








