உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு: பல்ஸ் விலையை ரூ.11,000 ஏற்றிய ரினால்ட்

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பல்ஸ் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியது.
நிசான் மைக்ராவின் அச்சு அசலாக இருக்கும் பல்ஸ் ஹேட்ச்பேக் காரின் டீசல் மாடலை தற்போது விற்பனைக்கு விட்டுள்ளது ரினால்ட். ரூ.5.77 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ள பல்ஸ் டீசல், நிசான் மைக்ராவைவிட அதிக விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ரினால்ட்.
இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு பின்பு பல்ஸ் பெட்ரோல் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர ரினால்ட் தி்ட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டும் இதுவரை ஆரவாரமான புக்கிங் எதுவும் பெறாத நிலையில், பல்ஸ் டீசல் காரின் விலையை ரூ.11,000 உயர்த்தியுள்ளது ரினால்ட்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பல்ஸ் டீசல் பூர்த்தி செய்யுமா என்பதில் இன்னமும் சந்தேகம் நிலவுகிறது. இந்த நிலையில், பல்ஸ் காரின் விலையை திடீரென ரினால்ட் உயர்த்தியுள்ளது அந்த காரின் விற்பனையில் இந்த விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








