இந்தியாவில் டேஸியா லாட்ஜி எம்பிவியை களமிறக்க ரினால்ட் திட்டம்

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனியாக கார் விற்பனையில் இறங்கியுள்ளது. சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் அந்த நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.
இந்த நிலையில், மார்க்கெட்டில் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களுக்கான மவுசு திடீரென்று அதிகரித்துள்ளதையடுத்து முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் புதிய எம்பிவி கார்களை விற்பனைக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளன.
அந்த வரிசையில் ரினால்ட் நிறுவனம் தனது பட்ஜெட் பிராண்டான டேஸியாவின் லாட்ஜி எம்பிவியை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா மோட்டார்ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புத்தம் புதிய எம்பிவி அடுத்த ஆண்டு பிரிட்டனில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புத்தம் புதிய எம்பிவியை ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய எம்பிவி அதிக இடவசதியுடன் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களிலும் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது.
ஆனால், இந்த புதிய எம்பிவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறி்த்து ரினால்ட் இதுவரை தகவல்கள் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








