அடுத்த ஆண்டு மோடஸ் ஹேட்ச்பேக் காரை களமிறக்கும் ரினால்ட்

Renault Modus
ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையிலான விலையில் தனது மோடஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்க ரினால்ட் முடிவு செய்துள்ளது.

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் வெகு வேகமான வளர்ச்சியை பெற தீர்மானித்து அதற்கு தக்கவாறு காய் நகர்த்தி வருகிறது.

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பாலிசியை கடைபிடித்து முதலில் புளூயன்ஸ் மற்றும் கோலியோஸ் ஆகிய பிரிமியம் ரக கார்களை களமிறக்கியது.

இதைத்தொடர்ந்து, தனது பார்டனரான நிசான் நிறுவனத்தின் மைக்ரா ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட பல்ஸ் ஹேட்ச்பேக் காரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

பிரான்சிலிருந்து புதிய ஹேட்ச்பேக் கார் மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில், அச்சு அசல் மைக்ராவை போலவே பல்ஸ் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவிக்கு அடுத்து தனது மோடஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ரினால்ட் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் இந்திய சாலைகளில் தடம் பதிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த புதிய கார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ரிட்ஸ், ஹூண்டாய் ஐ10 கார்களுக்கு இந்த புதிய கார் கடும் சவாலை ஏற்படுத்தும் என்று ஆட்டோ துறை ஆருடங்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, February 17, 2012, 10:54 [IST]
English summary
French Car maker Renault planning to launch Modus hatchback in India next year. The hatch back will be priced between Rs.3.5-4.5 lakh bracket. The Renault modus will give tough competition to Maruti Ritz and Hyundai i10.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+