இந்த ஆண்டு புதிய கார் மாடலை அறிமுகப்படுத்தும் ரினால்ட்

Renault Laguna
டஸ்ட்டர் எஸ்யூவியை தவிர்த்து இந்த ஆண்டு மேலும் ஒரு புதிய கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரினால்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்திய கார் மார்க்கெட்டில் தனித்து களமிறங்கிய பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு புளூயன்ஸ் பிரிமியம் செடான் கார், கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த வாரம் நடந்த ஆட்டோ கண்காட்சியில் பல்ஸ் ஹேட்ச்பேக் காரை ரினால்ட் அறிமுகம் செய்தது. இதற்கடுத்து, தனது டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் ஒரு புதிய கார் மாடலை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக ரினால்ட் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த புதிய கார் மாடல் குறித்த எந்த தகவலையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

அனைத்து செக்மென்ட்டிலும் கார் மாடல்களை அறிவித்துவிட்ட ரினால்ட் மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மட்டும் இதுவரை எந்த மாடலையும் அறிவிக்கவில்லை. மேலும், மிட்சைஸ் கார் மார்க்கெட் நன்கு வளர்ச்சி பெற்று வருவதாலும், புதிய செடான் காரை ரினால்ட் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 18, 2012, 14:56 [IST]
English summary
French car maker Renault has announced to launch 2 new car models by this year including Duster Suv. The new model may be a mid size car, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+