செப்டம்பர் 7 ந்தேதி அறிமுகமாகிறது ஸ்கேலா

நிசான் சன்னி காரை ஸ்கேலா என்ற பெயரில் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. முன்பக்கமும், பின்பக்கமும் மாறுதல்களை செய்து தனது லோகோவை போட்டு சன்னியை ஸ்கேலாவாக்கியிருக்கிறது ரினால்ட்.
ஒரு சில மாற்றங்கள் கண்டிருந்தாலும் ஹெட்லைட் உள்ளிட்டவை மாற்றம் காண வில்லை. சன்னி போன்றே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் ஸ்கேலா விற்பனைக்கு வருகிறது. டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் ஆகியவற்றில் மாற்றம் இல்லை.
பண்டிகை கால பட்டியிலில் இடம்பெற்றுள்ள கார் மாடல்களில் ஸ்கேலாவும் ஒன்று. இந்த நிலையில், செப்டம்பர் 7ந் தேதி ஸ்கேலாவை முறைப்படி அறிமுகப்படுத்த ரினால்ட் திட்டமிட்டுள்ளது. முதலில், மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வரும் இந்த கார் அடுத்து சிவிடி ஆட்டோமேட்டிக் வெர்ஷனும் விற்பனைக்கு கொண்டு வர ரினால்ட் திட்டமிட்டுள்ளது.
ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் வர இருப்பதாக சந்தை பரபரக்கிறது. சன்னியை விட ஸ்கேலா சற்று கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








