காப்பி பேஸ்ட்டை விடாத ரெனோ: அடுத்து சன்னியின் நகலை களமிறக்குகிறது

கடந்த ஆண்டு மஹிந்திரா கூட்டணியிலிருந்து விலகிய பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் தற்போது தனித்து கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தனது சர்வதேச பார்ட்னரான நிசானுடன் கூட்டு சேர்ந்து சென்னை அருகே ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு ப்ளூயன்ஸ், கோலியோஸ் கார்களையும், இந்த ஆண்டு துவக்கத்தில் பல்ஸ் ஹேட்ச்பேக் காரையும் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதில், பல்ஸ் ஹேட்ச்பேக் கார் ஏற்கனவே நிசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் மைக்ரா காரின் நகலாக வந்துள்ளது.
புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை ரினால்ட் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், லோகோவை மட்டும் மாற்றி மைக்ராவின் நகலான பல்ஸ் காரை அறிமுகப்படுத்தி ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அடுத்து தற்போது விற்பனையில் வெற்றி நடைபோட்டு வரும் நிசானின் சன்னி காரின் மீது ரெனோ கண் வைத்துள்ளது. மைக்ராவின் நகல் பல்ஸ் போன்றே நிசான் சன்னியின் நகல் ஸ்கேலாவை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், நிசான் சன்னியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் சன்னியை விற்பனைக்கு கொண்டு வரவும் ரினால்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை ரினால்ட் மீண்டும் ஏமாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








