இந்தியாவில் புதிய பிராண்டை அறிமுகப்படுத்த ரெனோ திட்டம்

இந்தியாவில் லெக்சஸ் பிராண்டை டொயோட்டோவும், இன்பினிட்டி பிராண்டை நிசானும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதன்மூலம், தங்களது உயர்ரக கார்களை விற்பனை செய்ய அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனமும் தனது இனிசியல் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பிராண்டில் தனது உயர்ரகத்தை சேர்ந்த கார்களை விற்பனைக்கு கொண்டு வரவும் ரினால்ட் திட்டமிட்டுள்ளது.
ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்களின் கார் விற்பனை அதீதமாக வளர்ச்சி கண்டு வருவதே ரினால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது உயர்ரக தயாரிப்புகளையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர துடிப்பதற்கு காரணம். மேலும், பிரிமியம் பிராண்டுக்கென புதிய ஷோரூம்களை திறக்கவும் அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








