சென்னை ஆலையில் கார் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் ரெனோ-நிசான்!

ஜப்பானை சேர்ந்த நிசான் மற்றும் பிரான்சை சேர்ந்த ரினால்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கட்டியுள்ள கார் ஆலை சென்னை அருகே ஒரகடத்தில் செயல்பட்டு வருகிறது. ரூ.4,500 கோடியில் கட்டப்பட்ட இந்த ஆலையில் தற்போது இரு நிறுவனங்களும் தங்களது கார் மாடல்களை உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த ஆலையில் தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நீண்ட கால வர்த்தக திட்டத்துடன் இந்திய மார்க்கெட்டில் இறங்கியுள்ள இந்த நிறுவனங்களும் அடுத்தடுத்து பல புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன.
மேலும், இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளன. இதனால், தற்போது ஆலையின் கார் உற்பத்தி திறனை இரு மடங்கு உயர்த்த இந்த கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வரும் 2015-16ம் ஆண்டுக்குள் கார் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 8 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால், சென்னை ஆலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








