அடுத்த மாதம் 4ந் தேதி அறிமுகமாகிறது ரெனோ டஸ்ட்டர்!

ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் டஸ்ட்டர் விற்பனைக்கு வரும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரூ.50,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு டஸ்ட்டருக்கு புக்கிங் செய்யப்படுகிறது.
5 பேர் செல்லும் வசதிகொண்ட இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியான டஸ்ட்டரில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மாடல்களில் டஸ்ட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது.
கருப்பு, வெள்ளை, சிவப்பு, சில்வர், சாக்லேட், பிரவுன் என ஆறு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும். டஸ்ட்டர் விற்பனைக்கு முறைப்படி அறிமுகம் செய்யப்படும் தினத்தன்றே விலை விபரம் அறிவிக்கப்படும் என ரினால்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








