டஸ்ட்டர் கொடுத்த உற்சாகம்.. அடுத்து புதிய செடான்:ரெனோ

தனது கூட்டணி நிறுவனமான நிசானின் மைக்ரா காரை பல்ஸ் என்ற பெயரில் ரினால்ட் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.
இதேபோன்று, தற்போது நிசானின் வெற்றிகரமான மாடலாகியுள்ள சன்னி செடான் காரையே அந்த நிறுவனம் தனது பிராண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஸ்கேலா என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய செடான் கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும் என தெரிகிறது.
அதிக இடவசதி, நிறைவான மைலேஜ் என நிசான் சன்னி வாங்கியுள்ள பெயரை வைத்தே தனது மார்க்கெட்டை பிடிக்க யுக்திகளை அந்த நிறுவனம் வகுத்துள்ளது.
இதுகுறித்து ரினால்ட் நிறுவனத்தின் தலைவர் மார்க் நசீப் கூறுகையில்," ஏற்கனவே அறிவித்தபடி, இந்த ஆண்டுக்குள் 5 மாடல்களை மார்க்கெட்டில் நிலை நிறுத்திவிடுவோம். டஸ்ட்டருடன் சேர்த்து தற்போது 4 மாடல்கள் வந்துவிட்டன.
அடுத்து புதிய செடான் காரை வரும் தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது 60 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே பெறப்படுகிறது. இதனால், மார்க்கெட்டில் போட்டி போடக்கூடிய விலையில் விற்பனை செய்ய முடியும்.
மேலும், ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் டஸ்ட்டர் எஸ்யூவியை இங்கிலாந்துக்கு ஏற்றுமதியை துவங்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








