அடுத்த மாதம் டஸ்ட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது ரினால்ட்

Renault Duster
ரூ.7 லட்சம் என்ற கடும் சவாலான விலையில் அடுத்த மாதம் டஸ்ட்டர் எஸ்யூவியை ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ளூயன்ஸ், கோலியோஸ், பல்ஸ் கார்களின் வரிசையில் அடுத்து டஸ்ட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது ரினால்ட். சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

உற்பத்தி பிரச்னைகளால் அடுத்த ஆண்டுதான் டஸ்ட்டர் வரும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அடுத்த மாதமே டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாக தெரிகிறது.

முதலில் டீசல் மாடலில் மட்டும் டஸ்ட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது. 85 பிஎச்பி மற்றும் 108 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

மேலும், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலும் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.9 லட்சம் விலையில் வரும் என்று தகவல்கள் கூறி வந்த நிலையில், தற்போது ரூ.7 லட்சம் என்ற சவாலான விலையில் டஸ்ட்டர் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 18, 2012, 11:59 [IST]
English summary
French Car maker Renault is planning to launch Duster compact suv by next month, says reports. The new suv will be available in both diesel and petrol engine models and starting price at Rs.7 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+