ரினால்ட் ஸ்கேலா செடான் கார்: முதல் பார்வை

நிசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் மைக்ரா ஹேட்ச்பேக் காரை பல்ஸ் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து ரினால்ட் விற்பனை செய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது நிசானின் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் சன்னி செடான் காரை ஸ்கேலா என்ற பெயரில் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வருகிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் சில மாறுதல்களை செய்து சன்னியை ஸ்கேலாவாக மாற்றியிருக்கிறது ரினால்ட்.
ஆனால், சன்னியை விட கூடுதலான விலையில் ஸ்கேலா விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அடுத்த மாத துவக்கத்தில் வர இருக்கும் ஸ்கேலா காரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படங்களை வாசகர்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.
எங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்கேலா படங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








