அறிமுகம் தேதி குறிப்பிடாமலேயே டஸ்ட்டருக்கு புக்கிங் துவங்கிய ரினால்ட்

கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை ரினால்ட் காட்சிக்கு வைத்திருந்தது.
கிராஸ் ஓவர் ரகத்தை சேர்ந்த இந்த எஸ்யூவி ரூ.10 லட்சம் விலைக்குள் வரும் என்ற தகவல்களால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டஸ்ட்டருக்கு புக்கிங் துவங்கப்பட்டு விட்டாலும், இது புதிய மாடல் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் சிறிது சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால், பல நாடுகளில் இது பரவலாக ஏறறுக்கொள்ளப்பட்ட மாடல் என்பதால் அந்த நம்பிக்கையுடன் புக்கிங் செய்யலாம்.
டஸ்ட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்:
ரூ.10 லட்சம் விலைக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய டஸ்ட்டர் எஸ்யூவியில் யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் மற்றும் புளூடூத் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், சேட்டிலைட் ஆடியோ, போன் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, ரியர் டிஃபாகர், ரியர் வைப்பர் அண்டு வாஷர், எலக்ட்ரிக் மிரர், ரியர் பார்க்கிங் சென்சார், பனி விளக்குகள் ஆகிய வசதிகளை கொண்டிருக்கும்.
இதேபோன்று, டியூவல் ஏர்பேக்ஸ், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், இபிடி ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டஸ்ட்டர் வருகிறது. வெளிப்புறம் மிக எடுப்பகா இருக்கும் அதேவேளையில், ஆங்காங்கே க்ரோம் பூச்சுகளுடன் மிளிர்கிறது டஸ்ட்டர்.
உட்புறம் லெதர் அப்ஹோல்ஸ்டரியால் அலங்காரத்தை கொண்டிருக்கிறது. இதன் 16 இஞ்ச் வீல்களும் டஸ்ட்டரின் கம்பீரத்தை இன்னும் ஒரு படி மேலே தூக்குகிறது. டஸ்ட்டர் எஸ்யூவியில் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.
இதில், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13 மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு19 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என்று ரினால்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








