ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார்களை மெருகூட்டும் மலபார் தேக்கு

Malabar Teak
ரூ.2.5 கோடி விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களின் டேஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீல்களில் மர வேலைப்பாடுகள் கேரளத்திலிருந்து செல்லும் மலபார் தேக்கு மரத்தில்தான் செய்யப்படுகின்றன.

பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. அரசப் பரம்பரையினர் முதல் பெரும் தொழிலதிபர்கள் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பதை தங்களது அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர்.

இந்த நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களின் உட்புறம் உயர்தர மர வேலைப்பாடுகளால் இழைக்கப்பட்டிருக்கும். கண்ணைக் கவரும் இந்த மர வேலைப்பாடுகள் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.

டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், கைப்பிடிகள் ஆகியவை மர வேலைப்பாடுகளால் மிளிரும். இந்த நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் உட்புறம் கேரளாவிலிருந்து செல்லும் தேக்கு மரங்களில்தான் செய்யப்படுகின்றன.

கேரளாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உயர்தர தேக்கு மரங்கள் இங்கிலாந்திலுள்ள குட்வுட் என்ற இடத்திலுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆலைக்கு சுமார் 8,000 கிமீ பயணம் செய்து சென்றடைகிறது.

இந்த நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மர வேலைப்பாடுகள் இந்திய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களாலும் பெரிதும் விரும்பப்படுகிறது.

இதனால், கோஸ்ட் கார் தவிர ஃபான்டம் காரிலும் வாடிக்கையாளரின் விருப்பத்தை ஏற்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கேரள தேக்கு மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு மர வேலைப்பாடுகளை செய்து தருவதற்கு ரூ.2 லட்சம் கூடுதலாக ரோல்ஸ் ராய்ஸ் நிர்ணயிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2012, 10:06 [IST]
English summary
Rolls-Royce, the quintessential British carmaker that was adored by several Indian Maharajas is now adding a bit of India to its cars. The carmaker is importing Malabar Teak wood from India to be used to make veneers used in the interiors of the Ghost and the Phantom. The Malabar teak wood being used in the Rolls-Royce Ghost is delicately crafted by experienced workers who make logs of wood in to fine veneers and dashboards. The quality of the wood veneers have always been appreciated in Rolls-Royces.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+