சிஎன்ஜி மற்றும் டீசல் கார்களில் எது பெஸ்ட்?: ஒப்பீட்டு பார்வை

Wagon R
கார் வாங்கும்போது எதை பார்க்கிறமோ இல்லையோ, எந்த கார் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், போக்குவர்த்து செலவு குறைவாக இருக்கும் என்பதைதான் மண்டையை போட்டு குடைந்து கணக்கிடுகிறோம்.

அப்படி குடைந்தெடுத்த விஷயத்தில் கடைசியில் மிஞ்சுவது டீசல் கார்கள்தான். அதிக விலை மற்றும் அதிக பராமரிப்பு செலவை கொடுத்தாலும் டீசல் கார்களுக்குத்தான் மார்க்கெட்டில் இப்போது மதிப்பு.

மார்க்கெட்டில் கிடைக்கும் எரிபொருள்களில் டீசல்தான் விலை குறைவு என்பதுடன், டீசல் கார்கள் அதிக மைலேஜை கொடுக்கின்றன என்பதும் முக்கிய காரணம்.

ஆனால், டீசலுக்கு சமமான விலை கொண்ட சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. டீசலை விட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சிஎன்ஜி கார்கள் எடுபடாததற்கு குறைந்த பிக்கப், சிஎன்ஜி நிரப்புவதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

இதைவிட முக்கியமாக தற்போது டீசல் கார்களை விட சிஎன்ஜி கார்களை இயக்குவதற்கான போக்குவரத்து செலவும் கூடுதலாக இருப்பதாலும் மவுசு மங்கியுள்ளது. டீசல் கார்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு ரூ.1.75 மட்டுமே செலவாகிறது.

ஆனால், சிஎன்ஜி கார்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு ரூ.2.10 செலவாகிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் சிஎன்ஜி கார்களின் எஞ்சினில் பிரச்னை எழுவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தவிர, சிஎன்ஜி கார்களைவிட டீசல் கார்களின் பின்னி எடுக்கும் பெர்ஃபார்மென்சும் கார் டிரைவர்களின் முதல் விருப்பமாக டீசல் கார்கள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, March 23, 2012, 11:14 [IST]
English summary
Diesel Cars have become a rage in India for a reason. Despite diesel's tag of being a dirty fuel, diesel cars costing more than petrol cars or even higher maintenance and repair costs of diesel cars have not stopped people from buying diesel cars. Diesel offers lower running costs and better fuel economy than petrol cars. It has now emerged that diesel is also the cheapest fuel in India ahead of CNG.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+