கையில் காசு இல்லாமல் செகன்ட் ஹேண்ட் கார் வாங்கினேன்: சச்சின் நெகிழ்ச்சி
மும்பையில் இன்று நடந்து வரும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை சச்சின் டெண்டுல்கர் சற்றுமுன் அறிமுகப்படுத்தினார். பின்னர், விழாவில் பேசிய அவர் கூறியதாவது:
"எனக்கு 14 வயதிலிருந்தே பிஎம்டபிள்யூ கார்கள் மீது தீராத காதல் ஏற்பட்டது. எப்படியாவது பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று கனவு இருந்து வந்தது.
இருப்பினும், கையில் அப்போது புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்குவதற்கு போதிய பணம் இல்லை. பின்னர், ஓரளவு பிரபலமான நேரத்தில் பிஎம்டபிள்யூ கார்கள் மீதான காதலால், கடந்த 1993ம் ஆண்டு முதன்முதலாக செகன்ட் ஹேண்ட் பிஎம்டபிள்யூ காரை வாங்கினேன். அந்த காரில் ஏறி உட்கார்ந்து ஓட்டிபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மேலும், பெரும்பாலும் டிரைவர் இருந்தால் கூட நான்தான் காரை ஓட்டுவேன். பார்க்கிங் செய்யும்போது மட்டும் டிரைவரிடம் சாவியை கொடுத்துவிட்டு செல்வேன். குடும்பத்துடன் செல்லும்போது மட்டும் பின் இருக்கையில் அமர்ந்து கொள்வேன். பார்க்
புதிய 3 சீரிஸ் காரை சமீபத்தில் லண்டனிலுள்ள ரேஸ் டிராக்கில் ஓட்டிப் பார்த்தேன். கையாளுமை, சொகுசு, பாதுகாப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. எனது அனுபவத்தில் ஆக்சிலரேசன், பிரேக் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது," என்று பேசினார்.
(பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் படங்கள்)


Click it and Unblock the Notifications









