பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை சச்சின் அறிமுகப்படுத்துகிறார்: பிஎம்டபிள்யூ அறிவிப்பு
மும்பையில் புதிய 3 சீரிஸ் சொகுசு செடான் காரை இன்னும் சற்று நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகப்படுத்துகிறார்.

என்ட்ரி லெவல் சொகுசு செடான் காரான 3 சீரிஸ் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று. இந்த நிலையில், புதிய அம்சங்களுடன் 3 சீரிஸ் காரை மேம்படுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ.
ஆடி கார் நிறுவனத்தால் நெருக்கடியில் இருக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு இந்த புதிய 6 வது தலைமுறை மாடலாக வரும் 3சீரிஸ் கார் மிக முக்கியமான கார் மாடல். மேலும், இந்த ஆண்டு பிற்பகுதி விற்பனையில் தோளோடு தோள் நிற்கும் மாடலாக கருதி புதிய 3 சீரிஸ் காரை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வரும் இந்த புதிய கார் மாடல் பென்ஸ் சி கிளாஸ் மற்றும் ஆடி ஏ4 செடான் கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும்.
(அதிக தகவல்களுக்கு எங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்தொடருங்கள்)


Click it and Unblock the Notifications








