சுஸுகியின் புதிய ஹயாட்டே பைக்கின் விளம்பர தூதரானார் சல்மான்

சுஸுகி ஹயாட்டே பைக்கின் விளம்பர தூதராக நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். சுஸுகி ஹயாட்டே பைக்கை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான் தோன்றுவார்.

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹயாட்டே என்ற புதிய பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பார்வைக்கு அறிமுகம் செய்தது.

பார்ப்பதற்கு சிலிங் ஷாட் பைக்கை நினைவுப்படுத்திய புதிய ஹயாட்டே விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Salman Khan
இந்த நிலையில், புதிய ஹயாட்டே பைக்கை பிரபலப்படுத்தும் விதமாக பாலிவுட் நடிகர் சல்மான்கானை விளம்பர தூதராக நியமித்துள்ளது சுஸுகி.

மேலும், ஹயாட்டே பைக்குக்காக சல்மான் நடித்துள்ள டிவி விளம்பரம் விரைவில் ஒளிப்பராக உள்ளது. இதன்மூலம், ஹயாட்டே பைக்கை வெகுவாக பிரபலப்படுத்தியபின் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வர சுஸுகி திட்டமிட்டுள்ளது.

பல மாடல்களை கையில் வைத்திருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விற்பனை வளர்ச்சியை எட்ட முடியாத நிலையில் இருக்கும் சுஸுகி ஹயாட்டேவை பெரிதும் நம்பியிருக்கிறது.

எனவேதான் சல்மான் கானை விளம்பர தூதராக நியமித்துள்ளது. சல்மான்தான் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் விளம்பர தூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 20, 2012, 10:02 [IST]
English summary
Suzuki, the Japanese two wheeler manufacturer is all set to launch its new 110cc motorcycle Hayate in a grand way. It has named Bollywood super star Salman Khan as its brand ambassador. We expect the Hayate to be launched within a few months and its image will be boosted by its association with Salman Khan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+