கார் கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைந்த எஸ்பிஐ
ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி குறைத்ததையடுத்து, நாட்டின் மிகப்பெரிய கார் கடன் வழங்கும் நிறுவனமாக திகழும் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) கார் கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு வங்கிகளுக்கான ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், வங்கிகளும் கார் கடனுக்கான வட்டியை கணிசமாக உயர்த்தின.இந்த நிலையில்,பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கான ரெப்போ ரேட் விகிதத்தை 50 புள்ளிகள் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதைத்தொடர்ந்து, வங்கிகளும் கார் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. இதில்,முதலாவதாக நாட்டின் மிகப்பெரிய கார் கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி, கார் கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
கார் கடன்கள் மீது 11% சதவீதம் முதல் 14 சதவீதம் வரை எஸ்பிஐ வட்டி நிர்ணயித்துள்ளது. இதில், 0.5 சதவீதத்தை குறைப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.இதனால், வாடிக்கையாளர்களுக்கு பயன் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் வி்ற்பனையாகும் 80 சதவீத கார்கள் கடன் திட்டங்கள் மூலம்தான் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டு கார் கடன் வட்டி அதிகரித்ததால், கார் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது கார் கடன் வட்டி குறைக்கப்படுவதால் மீண்டும் கார் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








