கார் கடன் வட்டியை 0.50% குறைத்த பாரத ஸ்டேட் வங்கி!

SBI Car loan
கார் கடன் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ). நாளை முதல் குறைந்த வட்டி திட்டம் அமலுக்கு வருகிறது.

நாட்டின் மிகப் பெரிய வங்கியாக திகழும் எஸ்பிஐ வாகன கடன் வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால், வாகன கடன் வாங்கும் போக்கு குறைத்துவிட்டது.

இதனால், வங்கிகளின் சில்லறை கடன் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கார் கடனுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.50 சதவீதம் குறைத்துள்ளது.

இதன்மூலம், 11.25 சதவீதமாக இருந்து வரும் வட்டி விகிதம் தற்போது 10.75 சதவீதமாக குறைந்துள்ளது. உதாரணமாக, 7 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் திட்டத்துக்கு இதுவரை இருந்து வந்த மாதத்தவணை ரூ.1,725 லிருந்து இனி ரூ.1,699 ஆக குறையும்.

இது வாடிக்கையாளர்களை கவர்வதோடு, பெரும் பயனளிக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த அறிவிப்பு புதிய வாடிக்கையாளர்களு்ககு மட்டும் பொருந்தும் என பாரத ஸ்டேட் வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, August 6, 2012, 10:30 [IST]
English summary
State Bank Of India has announced a 0.5% cut in car loan rates to 10.75% fro, 11.25%. The new rates of interest will be applicable from August 7, 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+