பெட்ரோல் விலை உயர்வால் யூஸ்டு கார் விற்பனையும் 'டல்'

கடந்த இரு மாதங்களில் யூஸ்டு கார் விற்பனை 15 முதல் 20 சதவீதவம் வரை குறைந்துவிட்டதாக யூஸ்டு கார் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய கார் மார்க்கெட்டுக்கு இணையாக யூஸ்டு கார் மார்க்கெட்டும் நன்றாக வளர்ந்து வருகிறது. ஆனால், சமீபத்திய பெட்ரோல் விலை உயர்வு கார் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய பெட்ரோல் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யூஸ்டு பெட்ரோல் கார் விற்பனையும் சரிந்து விட்டது.
இதுகுறித்து யூஸ்டு கார் டீலர் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஷர்மா கூறுகையில்," பெட்ரோல் விலை உயர்வு யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக பயன்படுத்திய பெட்ரோல் கார் விற்பனை 20 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. அனைத்து தரப்பினரும் டீசல் கார்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் தருவதால் பெட்ரோல் கார்களை ஷெட்டிலேயே நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வர்த்தகத்தில் தேக்கமான சூழ்நிலை நிலவுவதால் முதலீடும் முடங்கி கிடக்கிறது. இதனால், பயன்படுத்திய கார் மார்க்கெட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் யூஸ்டு கார் மார்க்கெட் வர்த்தகம் அடியோடு பாதிக்கப்பட்டு விடும்," என்றார்.


Click it and Unblock the Notifications








