சியல் நிறுவனத்துடனான கூட்டணியை முறிக்கும் ஹோண்டா

Honda City
வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக ஹோண்டா-சியல் கார் நிறுவனத்தின் கூட்டணி விரைவில் உடைகிறது.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவை சேர்ந்த சியல் நிறுவனத்தின் கூட்டணியில் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய மாடல்கள் மற்றும் டீசல் எஞ்சின் தயாரிப்புக்காக ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

ஆனால், ரூ.3,000 கோடி முதலீடு செய்யும் அளவுக்கு சியல் நிறுவனத்திடம் சக்தி இல்லை என்று தெரிகிறது. இதனால், தன்னிடம் உள்ள 5 சதவீத பங்குகளை ஹோண்டா நிறுவனத்திடம் விற்க சியல் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.

சியல் தெரிவிக்கும் மதிப்புக்கு ஏற்ப பங்குகளை வாங்குவதற்கு ஹோண்டா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இரு நிறுவனங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் விரைவில் இந்த கூட்டணி உடையும் என்று ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஹீரோ நிறுவனத்துடனான கூட்டணியிலிருந்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விலகிய நிலையில், இந்த ஆண்டு கார் நிறுவனமும் தனது கூட்டணியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, March 30, 2012, 10:39 [IST]
English summary
Another Japanese Joint Venture appears to be heading towards a divorce. Honda and its Indian partner SIEL are set for a showdown that might result in a split. Honda which set up its car building operations with Siel in the name of Honda Siel Cars India might soon end up buying Siel's minority stake of 5%.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+