சிங்கப்பூரில் வீட்டுக்குள்ளேயே கார் பார்க்கிங் வசதியுடன் அப்பார்மென்ட்!

இதனால், காரை கீழே நிறுத்திவிட்டு பிளாட்டிற்குள் சென்றவுடன் காரை பற்றிய சிறு கவலை மனதில் உலா வந்தபடி இருக்கும். இந்த குறையை போக்கும் வகையில் சிங்கப்பூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் எந்த தளத்தில் வசிப்பவராக இருந்தாலும் வீட்டின் வளாகத்திலேயே காரை நிறுத்தும் வசதியை அந்த குடியிருப்பு வளாகம் கொண்டிருக்கிறது. 30 வது மாடியாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டுக்குள்ளேயே காரை நிறுத்த முடியும்.
இரண்டு கார்களுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு இது வரப்பிரசாதமான அடுக்குமாடி குடியிருப்பாக கூறப்படுகிறது. ஏனெனில், சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு என்பதால் அங்கு பார்க்கிங் விதிமுறைகள் மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
இதனால், அதிக கார்கள் வைத்திருப்பவர்கள் இனி காரை பற்றிய கவலைப்பட வேண்டியது இருக்காது எனலாம். ஆனால், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் விலைதான் நம்மை தலைசுற்ற வைக்கிறது. அந்த அடுக்கமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ஜஸ்ட் 133.88 கோடிதான். சிங்கப்பூரில் சாதாரணமாக ஒரு சொகுசு பிளாட்டின் விலை இந்திய மதிப்பில் 41.83 கோடியாக விற்பனை செய்யப்படுகிறது.
கார் பார்க்கிங் வசதிக்காக 90 கோடியா?.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








