கார்களின் விலையை உயர்த்திய ஸ்கோடா

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கார்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன கார் நிறுவனங்கள்.
அந்த வகையில், இந்த மாத பட்டியலில் ஸ்கோடா இணைந்துள்ளது. தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த முறை 1 சதவீதம் முதல் 1.8 சதவீதம் கார்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது ஸ்கோடா. இதனால், ஸ்கோடா கார்களின் விலை மாடலுக்கு தக்கவாறு 10,000 முதல் 30,000 வரை உயர்கிறது.
மேலும், வெளிநாட்டிலிருந்து பெரும்பாலான பாகங்களைஇறக்குமதி செய்து கார்களை உற்பத்தி செய்வதும் ஸ்கோடாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே அவ்வப்போது விலை ஏற்றும் நிலைக்கு ஸ்கோடா தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








