கார்களுக்கான கோடைகால சர்வீஸ் முகாம்: ஸ்கோடா நடத்துகிறது

வாடிக்கையாளர் நலனை கருத்தில்க்கொண்டு, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கோடை மற்றும் மழை காலத்திற்கு முன்னதாக கார்களுக்கான சர்வீஸ் முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதையடுத்து கார்களுக்கு சர்வீஸ் மேளாவை ஸ்கோடா ஆட்டோ நடத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள ஸ்கோடா ஆட்டோ கார் சர்வீஸ் சென்டர்களில் அடுத்த மாதம் 2ந் தேதி முதல் 30ந் தேதி வரை இந்த சர்வீஸ் முகாம் நடக்கிறது. ஏசி, டயர்கள், பிரேக்குகள் உள்ளிட்ட 15 விதமான செக்கப்புகள் இந்த சர்வீஸ் முகாமில் செய்யப்படும்.
இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஸ்கோடா ஆட்டோ கேட்டுக்கொண்டுள்ளது.இதுவரை ஸ்கோடா ஆட்டோ 1.4 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், இந்த சர்வீஸ் முகாமில் 28,000 வாடிக்கையாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








