கார் விலையை ரூ.94,000 வரை உயர்த்திய ஸ்கோடா

பட்ஜெட்டில் கார்கள் மீதான கலால் வரி மற்றும் இறக்குமதி வரியை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியது. இதையடுத்து, அனைத்து கார் நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விலை உயர்வை அறிவித்து வருகின்றன.
தற்போது வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமான ஸ்கோடா ஆட்டோவும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. தனது பிரிமியம் செடான் சூப்பர் விலையை ரூ.94,000 வரை உயர்த்தியுள்ளது ஸ்கோடா. இதனால், சூப்பர்ப் கார் விலை தற்போது ரூ.19.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஃபேபியா ஹேட்ச்பேக் காரின் விலையை ரூ.14,000 வரை அதிகரித்துள்ளது ஸ்கோடா. ரேபிட் செடான் காரின் விலை ரூ.15,000 அதிகரித்துள்ளது.
எக்ஸிக்யூட்டிவ் செடான் கார் லாராவின் விலை ரூ.32,000 அதிகரித்துள்ளது. தற்போது லாராவின் விலை ரூ.12.9 லட்சமாக உயர்ந்துள்ளது.
யெட்டி எஸ்யூவியின் விலையை ரூ.43,000 வரை அதிகரித்துள்ளது ஸ்கோடா. இதனால், தற்போது யெட்டி எஸ்யூவியின் விலை ரூ.13.9 லட்சமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








