நவீன வசதிகளுடன் பள்ளிக்கூடம் கட்டிய ஸ்கோடா ஆட்டோ

கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் பல நல்ல காரியங்களை செய்து வருகின்றன. அந்த வகையில், பல கார் நிறவனங்கள் சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் கிராமங்களை தத்தெடுத்து பல சமூக நல பணிகளை செய்து வருவது குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் இதுபோன்ற சமூக நலப் பணிகளை துவங்கியுள்ளது. ஊரக பகுதி மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும் வகையிலும், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய பள்ளிக்கூடத்தை அவுரங்காபாத் அருகே கட்டியுள்ளது ஸ்கோடா ஆட்டோ.
10 வகுப்பறைகளுடன் நல்ல காற்றோட்டத்துடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பள்ளிக் கூடத்தில் கம்ப்யூட்டர், கற்றலுக்கான உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் என ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது.
சுதந்திர தினமான நேற்று இந்த புதிய பள்ளிக் கூடத்தின் திறப்பு விழா நடந்தது. ஸ்கோடா ஆட்டோ தலைவர் வின்பிரைடு வாலேண்ட் பள்ளிக் கூடத்தின் சாவியைகல்வித் துறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.


Click it and Unblock the Notifications








