மேட் இன் இந்தியா காராகும் ஸ்கோடா ஃபேபியா: விலை குறையும்

இந்த நிலையில், ஃபேபியா விற்பனையில் சோபிக்காததால் இந்திய மார்க்கெட்டிலிருந்து விடை கொடுக்க ஸ்கோடா முடிவு செய்துள்ளதாக புரளி ஒன்று ஆன்லைனில் உலா வருகிறது. இதற்கு மாற்றாக போக்ஸ்வேகன் அப் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட சிட்டிகோவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க ஃபேபியாவை பற்றி ஒரு நல்ல செய்தி ஸ்கோடா வட்டாரத்திலிருந்து வந்திருக்கிறது. மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் நடவடிக்கைகளை ஸ்கோடா மேற்கொண்டுள்ளது.
இதற்காக, ஃபேபியாவுக்கு பெரும்பாலான உதிரிபாகங்களை உள்நாட்டிலிருந்து பெற அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஃபேபியாவுக்கான 50 சதவீத பாகங்கள் உள்நாட்டிலிருந்து பெறப்படுகிறது. இதனை, 80 முதல் 90 சதவீதம் வரை உயர்த்த ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், ஃபேபியா விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஃபேபியா விலையை ஸ்கோடா குறைத்தது. இந்த நிலையில், உள்நாட்டு உதிரிபாகங்களால் ஃபேபியா விலை மீண்டும் குறைக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.
ஸ்கோடா ஃபேபியாவின் பெட்ரோல் மாடல் ரூ.4.26 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.5.57 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








