யெட்டி எஸ்யூவி விலையில் 2.2 லட்சம் தள்ளுபடி: ஸ்கோடா ஆஃபர்

யெட்டியின் எலிகன்ஸ் ஆல் வீல் டிரைவ் டாப் வேரியண்ட் ரூ.17.3 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சலுகை மூலம் யெட்டியின் டாப் வேரியண்ட் விலை ரூ.15.3 லட்சமாக குறையும்.
இதுதவிர, யெட்டியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில இலவச அணிகலன்களையும் ஸ்கோடா வழங்குகிறது. ரப்பர் மேட்டுகள், மட் பிளாப், கார் கவர் ஆகியவையும் கிடைக்கும்.
கடந்த ஆண்டு தயாரிப்பு என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், இவை நடப்பு ஆண்டில் அசெம்பிள் செய்யப்பட்டவை என்று ஸ்கோடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications